நாட்டின் உத்தியோகபூர்வ நிதி மற்றும் தங்கத்தின் கையிருப்பு தொடர்பான தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் சொத்துக்களின் தொகை கடந்த நவம்பர் மாதம் அளவில் ஆயிரத்து 587 மில்லியன் டொலர்களாக இருந்தது என இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க (Shehan Semasinghe) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் தங்கத்தின் கையிருப்பு 382.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது இந்திய விஜயத்தின் போது, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான இணக்கத்தையும் அத்தியவசிய பொருட்கள் மற்றும் மருந்தை கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பாக 1009.5 மில்லியன் டொலர்கள். அதில் 67 மில்லியன் டொலர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கையிருப்பு எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
