நாடு சிகப்பு கோட்டை தாண்டும் மட்டத்தில் உள்ளது - பேராசிரியர் அர்ஜூன் டி சில்வா
கோவிட் பரவலை தடுக்க 14 நாட்கள் தொடர்ந்தும் கடும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
யார் என்ன கூறினாலும் இதுவே விஞ்ஞான ரீதியான அடிப்படை நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு தற்போது சிகப்பு கோட்டை தாண்டும் மட்டத்திற்கு வந்துள்ளது. அரசாங்கம் இது குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
உடலில் உள்ள கொழுப்பை கரைக்க 20 மில்லி கிராம் மருந்து தேவை என்றால், 10 மில்லி கிராம் மாத்திரையை உட்கொள்வதால் பயனில்லை.பொருளாதார பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினைகளுக்காகவோ விஞ்ஞான நிலைப்பாட்டை மாற்ற முடியாது.
பேராசிரியர் மலிக் பீரிஸ் இந்த விடயம் சம்பந்தமான நிபுணர் எனவும் அவர் கூறுவதை நாம் கேட்க வேண்டும் எனவும் பேராசிரியர் அர்ஜூன் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.