நாடு வங்குரோத்து அடைவதனை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது– சஜித் கோரிக்கை
அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராம தெபரவெவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்து தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் யார் தம்மை ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் நிர்ணயம் செய்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பாரிய அனர்த்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு தலைமை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இயலாமை நாளுக்கு நாள் அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்து அடைவதனை இந்த அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா படத்தின் டீசர்.. மிரளவைக்கும் பிரம்மாண்ட காட்சிகள்.. Cineulagam