இறக்குமதிக்கான செலவு 30.5 சதவீதம் அதிகரித்துள்ளது! - மத்திய வங்கி தகவல்
இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில், இறக்குமதிக்கான செலவு 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு (2020) முதல் ஆறு மாதங்களில் 7675 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறக்குமதி செலவு இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில் 10,015 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இந்த காலத்தில் ஏற்றுமதி வருவாய் 29.1 சதவீதம் அதிகரித்து 5699 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.
எவ்வாறாயினும், ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதி செலவினத்தின் வேகமான வளர்ச்சியின் காரணமாக வர்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதி வருவாய் மற்றும் இறக்குமதி செலவினங்களுக்கிடையேயான இடைவெளி) 3262 மில்லியனில் டொலரில் இருந்து 4,316 மில்லியன் டொலராக அதிகரித்தது.
இந்த காலத்தில் இறக்குமதி செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் எரிபொருள் இறக்குமதி செலவு 543.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்தமையே என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
