ஊழல் நிறைந்த ஆட்சி முறைமை தொடர்கின்றது! - கர்தினால்
நாட்டில் ஊழல் மோசடிகள் நிறைந்த ஆட்சி முறைமை தொடர்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலை மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் இருக்கின்றார்கள். இது அவர்களின் உளநிலைக்கு உசிதமானதல்ல. இவ்வாறு நாட்டில் பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவரும் மெய்யாகவே விரும்பவில்லை. அவ்வாறு விரும்பினால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். நாட்டில் போதியளவு பணம் உள்ளது. எனினும் தற்பொழுது தேவையற்ற வகையில் பணம் செலவிடப்படுகின்றது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஊழல் மோசடி மிக்க ஆட்சி முறைமை காணப்படுகின்றது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இவ்வாறான ஆட்சி முறைமையைக் கொண்ட கலாச்சாரம் உருவாகியுள்ளது.
பலம்பொருந்தியவர்கள் சட்டத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் வலைத்துக் கொண்டனர். சாதாரண பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாபீயாக்களினாலும் ஊழல் மோசடிகளினாலும் மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளது.
அரசியல் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது என கர்தினால் தெரிவித்துள்ளார்.




