கொரோனாவால் இறப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய சந்தர்ப்பம் வழங்க வேண்டும்! தயாசிறி ஜயசேகர
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மண்ணில் பிறந்தவர்களை இறந்த பின்னர், இலங்கை மண்ணில் அடக்கம் செய்ய முடியாது என்றால், அது மிகப் பெரிய பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களை தகனம் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பிலான தனது நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இஸ்லாமிய சமய நம்பிக்கைக்கு அமைய மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்.
எனினும் இலங்கையில் கொரோனா தொற்றல் இறக்கும் முஸ்லிம்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வந்தன.
அண்மையில் பிறந்து 21 நாட்களே ஆன முஸ்லிம் தம்பதியின் குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்ததுடன் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முஸ்லிம்களின் ஜனஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யும் முடியும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆனால், இலங்கையில் அடக்கம் செய்ய இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
கொரோனா தொற்றல் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்தால், நிலத்தடி நீருடன் வைரஸ் கலந்து விடும் எனச் சிலர் கூறி வருகின்றனர்.
எனினும் வைரஸ் அப்படி நீருடன் கலக்காது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.