நாட்டு மக்களை திக்கு முக்காட வைக்கும் கோவிட் வைரஸ்! வேகமாக அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 744 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 2, 564 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 3,308 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462,767 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384, 557 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பத்தாயிரத்தைக் கடந்துள்ளது.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
