தொழிற்சங்க வளர்ச்சியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு: சங்கத்தினரின் பாராட்டு
ஊடகவியலாளர்களின் பாரிய பங்களிப்பின் ஊடாகவே எமது தொழிற்சங்கம் பல்வேறு தீர்வுகளை உழைக்கும் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து வளர்ச்சி அடைந்து வந்தது என அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.
கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் இன்று(01.05.2025) இடம்பெற்ற அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியதுடன், அதனை அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து வழங்கியுள்ளார்கள்.
அரசாங்கத்திற்கு நன்றி
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எமது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொழிலாளர்கள் சார் நலன்களில் அக்கறையோடு செயற்படுகின்ற இந்த அரசாங்கம், தொடர்ந்தும் சிறப்பாக நாட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை நாங்கள் இந்த மே தின கோரிக்கையாக அனுப்பி இருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
