காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி! அநுரவுக்கு சுமந்திரன் எச்சரிக்கை
வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை அநுர அரசு உடனடியாக மீளப்பெற பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் ஜனாதிபதி யாழ். மண்ணுக்கு வர முடியாமல் அல்லது கால் வைக்க முடியாமல் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று(01.05.2025) காலை நடைபெற்றுள்ளது.
கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த மே தினக் கூட்டம் இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்தக் கூட்டம், தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தர்களின் உரைகளுடன் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிறைவடைந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





