அரசாங்கத்திற்குள் இருப்பவர்கள் செய்யும் சதி - வீரவங்ச மற்றும் கம்மன்பிலவுக்கு ஏற்பட்ட நெருக்கடி
அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த இரண்டு முக்கியஸ்தர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது குறித்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வகித்து, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான மைத்திரிபால சிறிசேன தரப்புடன் இணைந்துகொண்ட இருவரே இவ்வாறு அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வகித்த இவர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த பொதுத் தேர்தலில் மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பிரபலமானவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு பேரும் அரசாங்கத்துடன் இணைவார்களா இல்லையா, அரசாங்கம் இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
