நிறம் மாறப்போகும் நிலவு! மக்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு ‘Blood Moon’ என்று அழைக்கப்படுகிறது.
சிவப்பு நிற நிலா
எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும் என கூறப்பட்டுள்ளது.
ரேலீ சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறமாக மாறும் இந்த நிகழ்வு சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், 2022க்கு பிறகு மீண்டும் இது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்த கிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திர கிரகணம்
ஒவ்வொரு வருடமும் உலகின் ஒரு சில பகுதிகளில் சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் நிகழ்வது வழமையான நிகழ்வாகும்.
அவற்றில் சில அரிய வகை கிரகணங்கள் பல வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்.
இந்நிலையில் 2022ம் ஆண்டு சந்திர கிரகணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு அரிய நிகழ்வு நடைபெறவிருக்கிறது.