ஒக்டோபர் 15ஆம் திகதியின் பின்னர் ஏற்படவுள்ள மாற்றம்! - செய்திகளின் தொகுப்பு
சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளின் படியும், ஆலோசனையின் படியும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குப் பின்னர் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது மாலை நேர செய்திகளின் தொகுப்பு,




