எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீனியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பழுப்பு நிற சீனி சத்தோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
லங்கா சீனி நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கி வருகிறது.எனவே அந்த லாபத்தின் பயனை பொதுமக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே புதுவருடக்காலத்தில் சீனியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா சீனி நிறுவனம் நேற்று வியாழக்கிழமையன்று 142 மில்லியன் ரூபாவை விற்பனை வருமானமாக பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மே மாதம் முதல் சத்தோச நிறுவனம் கிராமப்புறங்களில் நிறுவப்படும் என்றும் பந்துல தெரிவித்துள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam