இலங்கையின் கடனை மறுசீரமைக்க பல நாடுகள் மறுப்பு! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தலையிடுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அப்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் கடனை மறுசீரமைக்க மறுப்பு
கடனை மறுசீரமைப்பதற்காக கடன் வழங்கிய நாடுகளின் அனுமதியைப் பெறுமாறு சர்வதேச நாணய நிதியம் தமக்கு அறிவித்துள்ளதாகவும், ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்கிய நாடுகளும், நிறுவனங்களும் இலங்கையின் கடனை மறுசீரமைக்க மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது சிறந்த முடிவு என்றும் , 2020 ஆம் ஆண்டிலேயே அங்கு சென்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பதவியேற்கும் போது கூட இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன தமது கடன் கடிதங்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
