மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்(Video)
இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கிறது.
அன்றுமுதல் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் இலங்கை, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களின் ஒப்புதல் முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.
இது சர்வதேச நாணய நிதியதிடம் இருந்து இலங்கை உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னுரிமையளிக்கப்பட்ட விடயமாக உள்ளது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் இணைத்து இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்திகள் அனைத்தையும் தொகுத்து வருகின்றது எமது விசேட செய்திகளின் தொகுப்பு,