பதவி விலக தயாராகின்றார் மத்திய வங்கி ஆளுநர்!
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு பேராசிரியர் டபிள்யூடி லக்ஷ்மன் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது. பதவி விலகியதும், அவர் சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, விரைவில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam