மரணங்களுக்கு காரணம் கொரோனா ஒழிப்பு செயலணிக்குழு - ரணில் குற்றச்சாட்டு
நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மரணங்களுக்கு கொரோனா ஒழிப்பு செயலணிக் குழு பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வீடியோ தொழிநுட்பம் மூலம் ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா ஒழிப்பு செயலணிக்குழுவை உடனடியாக கலைத்து விட்டு, சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சபையின் ஊடதாக கொரோனா வை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படியில்லை என்றால் இலங்கை 21 ஆம் நூற்றாண்டின் வைஷாலி நகரமாக மாறும் ஆபத்து இருக்கின்றது.
கொரோனாவை ஒழிக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடைமுறைகளும் தோல்வியடைந்துள்ளன.
இன்னும் காலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடர் முகாமைத்துவச் சபை மூலம் இந்த நெருக்கடியில் இருந்து மீள திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.