ஷானி அபேசேகரவின் வழக்கு 13 ஆம் திகதி விசாரணைக்கு
குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர உடல்நிலை குறித்து இன்று நீதிமன்றத்தில் கவலை எழுப்பப்பட்டது.
ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்க மறுத்த மேல் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிணைக்கோரிக்கையை பரிசீலிக்க இன்னும் ஒரு வாரம் வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
எனினும் அபேசேகரவின் நிலைமை திருப்தியற்றது என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர். இந்த நிலையில் குறிப்பாக கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு ஆபத்தில் வைக்கப்பட்டுள்ள அபேசேகரவின் வழக்கை தேவையின்றி தாமதப்படுத்தாமல் இருப்பது சம்பந்தப்பட்ட அனைவரின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்றம் அனைத்து தரப்பு சமர்ப்பிப்புகளையும் கேட்டதுடன்,
இந்த வழக்கை மே 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று
உத்தரவிட்டது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri