கெஹலியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு
முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர தனி அமர்வொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசிகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை தற்போது மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர தனி அமர்வு
எனினும் குறித்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர தனி அமர்வொன்றை (ட்ரையல் அட் பார்) நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர், பிரதம நீதியரசருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை கொள்வனவு செய்ததன் ஊடாக கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கைக்கு பாரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இதனை ஒரு விசேட வழக்காக கருதி, மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வொன்றின் முன்பாக வழக்கை விசாரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை கொள்வனவு செய்வதற்காக, சுகாதார அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
