டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணை
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தம்மிக்க கணேபொல மற்றும் சோபித ராஜகருண ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் மனு இன்று ஆராயப்பட்டதுடன் விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ள டயனா கமகே

ராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் எனவும் அவர் அதனை மறைத்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் இரட்டை குடியுரிமையை கூட பெறாத அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.