இணையத்தளங்களில் பொய்ப் பிரசாங்களை தடுக்க புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இணையத்தளம் வழியாக பொய்யான தகவல்கள் தவறாக வழிநடத்தப்படும் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கான சட்ட வரைவை உருவாக்குமாறு சட்டவாக்க சபையினருக்கு ஆலோசனை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் உட்பட இணையத்தளங்களில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri