தலைமன்னாரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து! பாடசாலை மாணவன் பலி - பலர் படுகாயம்
இன்று பிற்பகல் தலைமன்னாரில், பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், பாடசாலை மாணவர்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொது வைத்தியாசாலையிலிருந்து ஐந்து நோயாளர் காவு வண்டிகள் தலைமன்னார் நோக்கிப் பயணித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam