சாவகச்சேரி நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
சாவகச்சேரி நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான கூட்டம் நகரசபையின் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று காலை கூடியுள்ளது.
இந்த நிலையில், 18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது தவிசாளரால் வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான ஆதரவோடு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்
திட்டம் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
