தங்கையை காப்பாற்ற போராடிய அண்ணனும் பலி - திருமணம் நடைபெறவிருந்த நிலையில் ஏற்பட்ட சோகம்
படல்கும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரயியன் அருவியில் தவறி வீழ்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 வயதுடைய சகோதரன், 23 வயதுடைய சகோதரி ஆகிய இருவரும் பரிதாபமான உயிரிழந்துள்ளனர்.
ஒக்காம்பிடிய பகுதியிலிருந்து படல்கும்பர பகுதிக்கு வருகை தந்து குறித்த அருவியில் நீராடும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர் வீழ்ச்சியினை பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளை சகோதரி கால் இடறி நீர் வீழ்ச்சியினுள் விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்றும் நோக்குடன் யுவதியின் அண்ணன் நீரில் பாய்ந்துள்ள நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக படல்கும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞனுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் , உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி தாதியர் பயிற்சிக்காக பதுளை தாதியர் பயிற்சி கல்லூரியில் இணையவிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
