நாயால் வந்த வினை! - அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை பனாமுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த சகோதரனின் மற்றைய சகோதரனின் வீட்டு நாய் கடித்தமையே கொலைக்கான பிரதான காரணம் என பனாமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை நாய் கடித்ததால் ஆத்திரமடைந்த மூத்த சகோதரர், தம்பியின் வீட்டிற்கு சென்று தம்பியின் மனைவியை தாக்கியுள்ளார்.
இதையறிந்த தம்பி அண்ணின் வீட்டுக்குச் சென்று அண்ணனை அரிவாள் மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, முலதியாவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பனாமுர பொலிஸார் சந்தேக நபரை கத்தி மற்றும் கோடரியுடன் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்தேக நபரின் மனைவி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
