பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் பிரித்தானிய பிரதமர்: செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் கோவிட் முடக்க நிலை நடைமுறையிலிருந்த போது முடக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, நேற்று இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும் இந்த விடயம் குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்தி பிரதமர் மீது மேலதிக விசாரணைகளை நடத்தவேண்டுமா? என்பதை முடிவு செய்யும் வகையில் வாக்களிப்பு ஒன்றை நடத்த எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சபாநாயகரிடம் அனுமதி பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தனது பிறந்தநாள் விழாவில் கோவிட் முடக்க நிலைவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொலிஸாரின் அபராதத்தைப் பெற்ற நகர்வு இப்போது நாடாளுமன்றத்தில் அவருக்கு நெருக்கடியை வழங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
