பிரித்தானிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி - சொந்த கட்சிக்குள்ளேயே அழுத்தம்
வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது பிரித்தானிய பிரதமருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் டொலருக்கு நிகராக பவுண்டின் பெறுமதி வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.
45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிப்பு
இதன்படி, கடந்த மாதம் 23ம் திகதி வெளியிடப்பட்ட மினி வரவு செலவு திட்ட அறிக்கையில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையிலேயே, வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதன்படி, சொந்தக்கட்சியில் இப்போது எழுந்துள்ள எதிர்ப்பை லிஸ் டிரஸ் இவ்வாறு கையாளப்போகிறார்? வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்வாரா என்பது அங்கு பேசுபொருளாகியுள்ளது.