எல்லை மீறி வந்த பிரித்தானிய படகை சிறைபிடித்தது பிரான்ஸ்: - போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட அறிவிப்பு
பிரான்ஸ் அரசு, எல்லை மீறி வந்த பிரித்தானிய கடற்படையின் இழுவை கப்பலை சிறைபிடித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை உருவாகியுள்ளது.
பிரான்சின் இந்த நடவடிக்கையால் பிரித்தானியாவின் அமைச்சர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 2ம் திகதியிலிருந்து பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிரித்தானிய இழுவை கப்பலை சிறைபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடன் உள்ள பொது போக்குவரத்து, வணிகம், பிற நாட்டவர்களுக்கு வேலை கொடுப்பது மற்றும் எல்லை விவகாரம் போன்ற பல பிரச்சனைகளை பிரித்தானியா எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் இழுவை கப்பல், தங்களின் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, பிரான்ஸ் கடற்படை அக்கப்பலை சிறைபிடித்து வைத்திருக்கிறது.
இந்நிலையில், பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பாக பிரான்ஸூடன் ஏற்பட்ட மோதலில் ஐரோப்பிய ஒன்றிய-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் மீறப்பட்டிருக்கலாம் என்று தான் அஞ்சுவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
உரிமம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், பிரித்தானிய படகுகள் அதன் துறைமுகங்களில் தரையிறங்குவதை நிறுத்த முடியும் என்று பிரான்ஸ் கூறியதை அடுத்து பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்தியாளர்கள் மத்தியில் இன்று மாலை பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அரசாங்கம் "இங்கிலாந்து நலன்களை உறுதிப்படுத்த தேவையான அனைத்தையும் செய்யும்" என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
"பிரித்தானிய மீனவர்கள் தங்கள் சட்டப்பூர்வ தொழிலில் ஈடுபடுவதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுடன், EU-UK வர்த்தக உடன்படிக்கையின்படி அவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் எங்களின் பழமையான, நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். தற்போது உறவில் நிலவும் கொந்தளிப்பை விட எங்களை ஒன்றாக இணைக்கும் உறவுகள் மிகவும் வலுவானவை" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.