உக்ரைன் சிறுமி என சமூகவலைத்தளத்தில் பரவும் போலிச் செய்தி
தனது நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினரை எதிர்த்து குரல் கொடுக்கும் 8 வயதான உக்ரைன் சிறுமி என போலிச் செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டு இருக்கிறது, இந்தச் சம்பவம் சில வருடங்களிற்கு முன்னர் பலஸ்தீனத்தில் இடம் பெற்றது என கூறப்படுகிறது.
அந்த சிறுமி ரஷ்ய படை வீரர் ஒருவரிடம் சென்று நேரடியாக தனது எதிர்ப்பை காட்டுகிறார். அந்தச் சிறுமியின் இந்த தைரியத்தை பலர் பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இவை முற்றிலும் பிழையான தகவல் என மற்றும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு படை நடவடிக்கை காரணமாக அந்நாட்டில் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடியிருப்பு பகுதிகளும் தாக்குதல் காரணமாக சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக ரஷ்யா மீது உக்ரைன் மக்களும் கடும் ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை ரஷ்யாவின் தாக்குதல்களில் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் நடந்த சம்பவத்தை, உக்ரைனில் நடந்ததாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக சர்வதேச ரீதியாக பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் சில தரப்பினர் போலியான தகவல்களை பரப்பி மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
