கடலை பார்ப்பதற்கு செல்ல சுமை ஊர்தியை திருடி சென்ற சிறுவர்கள்
நுவரெலியா பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் சிலர் அங்கிருந்து கடலை பார்ப்பதற்காக நீர்கொழும்பு நோக்கி சுமை ஊர்தி ஒன்றில் சென்றுக்கொண்டிருந்தது விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சுமை ஊர்தியின் சாவியை திருடிய சிறுவர்கள்
விபத்து நடந்த போது சுமை ஊர்தியில் நான்கு மாணவர்கள் இருந்துள்ளதுடன் விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நிட்டம்புவை பொலிஸார் கூறியுள்ளனர்.
11,12 மற்றும் 16 வயதான இந்த சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்த சுமை ஊர்தியின் சாவியை திருடி, அதனை ஓட்டிக்கொண்டு நீர்கொழும்பு பிரதேசத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமை ஊர்தியில் வந்த சிறுவர்களை நுவரெலியாவில் உள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள நிட்டம்புவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சித்திரவதை செய்யும் மாமியார் நான் அல்ல... ஆதாரத்தை வெளியிடுங்கள் : ரவி மோகனுக்கு சவால் விட்ட மாமியார்! Manithan
