கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் - மற்றுமொருவர் கைது
கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்கேதநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்து பணப் பரிசில் பெறும் நோக்கில் இவ்வாறு கைக்குண்டை வைத்துவிட்டு, அது தொடர்பில் தகவல் வழங்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் விசாரணைகளில் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து குருணாகல், மஹவ பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this video...
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri