அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சடலம் கண்டுபிடிப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டியில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாலபே, பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் ஜயவீர என்ற 45 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி காலை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வெலிபென்ன பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தால் என்பதனால் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் வீட்டிற்கு வருகைத்தராமையினால் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஜீப் வண்டி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் சென்று சோதனையிடும் போது அதற்குள் சடலம் ஒன்று இருப்பதனை கண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri