முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தென்னங்காணியிலிருந்தே இன்று (16.09.2023) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
இதன்போது இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயதுடைய புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
