கெசல்வத்த தினுகவின் உடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
துபாயில் மரணமான பாதாள உலக முக்கியஸ்தரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ராஜபக்ஷ ஆராச்சிகே தினுக மதுஷான் அல்லது 'கெசல்வத்த தினுகவின் உடலம் இன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தினுக துபாய்க்கு தப்பிச் சென்று தனது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை அங்கிருந்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவர் கடந்த வாரம் மாரடைப்பால் துபாயில் வைத்து காலமானார்.
இந்தநிலையில் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெசல்சத்த தினுக, போதைவஸ்து குற்றவாளியாக கருதப்படும் “மாக்கந்துரே மதுஷ்”இன் நெருங்கிய நண்பராவார்.
மாக்கந்துரே மதுஷ் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மாளிகாவதையில் காவல்துறையினருடன் இணைந்து போதைப்பொருள் தேடுதல் இடம் ஒன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது அங்கு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam