யாழில் துவிச்சக்கர வண்டிக்கு மேல் விழுந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துவிச்சக்கர வண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கேணியடி, ஆடியபாத வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவரே இன்று (26.10.2024) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொது சுகாதார பரிசோதகரும் இன்றையதினம் டெங்கு ஒழிப்பு களத்தரிசிப்புக்காக மேற்குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகள்
இதன்போது, குறித்த முதியவர் துவிச்சக்கரவண்டி மீது விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார். மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
