இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா - மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் முல்லைத்தீவுக்கு சென்ற நிலையில் நாயாறு பகுதியில் நீராடியுள்ளனர்.
அதன்போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் (வயது 29) என்ற இளைஞர் காணாமல்போயிருந்தார்.
இந்த நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
