யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தலோயா ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறுக்கு நீர் வழங்கும் கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யட்டியாந்தோட்டை - கந்தலோயா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய சுப்பிரமணியம் நடராஜ் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த ஆணின் மரணம் தொடர்பாகப் பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ருவான்வெல்ல நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.






சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
