ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் (Video)
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் மிதந்துக்கொண்டிருந்த ஆணின் சடலம் ஒன்றை இன்று மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள காட்டில் விறகு உடைக்க சென்ற ஒருவர், நீர் தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்டு, அது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த நீர் தேக்கத்தில் பிரதேசத்தில் உள்ளவர்கள் குளிப்பது வழக்கம் என்பதுடன் அருகில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர் தேக்கத்தில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
