விகாரையின் அறையொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்
ஹொரண, ஹல்தொட்ட, லெனவர ரஜமஹா விகாரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
மொரகஹஹேன, வீதியகொட பிரதேசத்தில் வசித்த12 வயதுடைய யெஷித் ஜும்ஹாமின் சடலமே இவ்வாறு இன்று (23) ஹொரண பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியை பிரேத பரிசோதனை செய்யுமாறு ஹொரண நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி விகாரையின் பீடாதிபதியிடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்
அதன்பின்னர், ஒக்டோபர் 28 ஆம் திகதி விகாரையின் களஞ்சிய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பெத்மகொட பொது மயானத்தில் ஒக்டோபர் 31 ஆம் திகதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுவனின் சடலம் இன்று பிரேத பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri