பாவனையற்ற படகிற்கு தீ வைப்பு: பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் பாவனையற்றிருந்த பல நாள் படகிற்கு அடையாளம் தெரியாத சிலர் தீயிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித் துறை முனைப்பகுதியில் நேற்று (15.09.2023) இரவு 10:00 மணியளவில் பாவனையற்ற படகிற்குடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
இதன் போது வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசுங்கவின் கவனத்திற்க்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸாரின் துரித செயற்பாட்டின் மூலம் முனை பிரதேசத்தில் உள்ள பல படகுகள் தீப்பற்றாமல் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
