சமுத்திரதேவா படகில் ஏற்பட்ட கோளாறு! நடு கடலில் அந்தரித்த பயணிகள் (Photos)
நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் வந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இன்று (23.05.2023) காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.
சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது.
கடற்றொழிலாளர்கள்
அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் உதவியுடன், படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இதன்காரணமாக பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
