நான்கு மணிநேர போராட்டத்தில் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீப்பரவல்: பொலிஸார் தீவிர விசாரணை(Video)
வவுனியா - வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மதுபானசாலை விருந்தகத்தில் இன்று (20.01) அதிகாலை 3.00 மணியளவில் திடீரென இடம்பெற்ற தீப்பரவல் சுமார் 4 மணிநேர போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அமர்ந்திருந்து மதுபானம் அருந்தும் குறித்த தனியார் மதுபானசாலை வழமை போன்று நேற்று இரவு மூடிய பின்னர் ஊழியர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இன்று அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் தீப்பிழம்புடன் சத்தம் கேட்டத்தினையடுத்து அயலவர்கள் வெளியில் சென்று பார்வையிட்ட சமயத்தில் மதுபானசாலை கட்டிடத்தின் மேற்பகுதி தீப்பற்றியெரிவதை அவதானித்துள்ளனர்.
அதனையடுத்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை தீயணைப்பு பிரிவினர் பொலிஸாரின் தண்ணீர் பவுசர் உதவியுடன் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த போதிலும் மதுபானசாலை கட்டிடத்தின் மேற்பகுதியில் பற்றியேறிந்து கொண்டிருந்த தீ மதுபானசாலையின் கீழ்பகுதியிலும் பரவத்தொடங்கியது.
எனினும் பலத்த முயற்சியின் பலனாக அருகேயுள்ள கட்டிடங்களுக்கு தீ பரவி செல்லாமல் தடுக்கப்பட்டதுடன், மதுபானசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் 4 மணிநேர போராட்டத்தின் மத்தியில் காலை 7.00 மணியளவில் முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இவ் தீவிபத்து சம்பவத்தினால் குறித்த மதுபானசாலையின் கட்டிடம் முழுமையாகச் சேதமடைந்திருந்ததுடன், பல லட்சம் பெறுமதியான பொருட்கள், மதுபான போத்தல்கள் என்பன தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாருடன் (அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும்) இணைந்து வவுனியா பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு வருகைதந்த இலங்கை மின்சார சபையினர் அப்பகுதிக்கான மின்சாரத்தினை உடனடியாக துண்டித்திருந்தமையினாலும் தீப்பரவலை தடுக்க முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் என்பதுடன் நான்கு மணிநேரம் அப்பகுதிக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி
வவுனியாவில் பாரிய சத்தத்துடன் தீப்பற்றி எரியும் மதுபானசாலை! போராடும் தீயணைப்பு பிரிவினர் (Photos)










புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம் News Lankasri
