எதிர்க்கட்சிகளின் அடிப்படையற்ற குற்றச்சாட்டு - பிரசன்ன ரணதுங்க
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள PCR பரிசோதனை கூடத்தை தனியார் மயப்படுத்தும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒரு சுகாதார தொழிற்சங்க அமைப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரங்களின் மற்றுமொரு பகுதி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலயத்தில் உள்ள PCR பரிசோதனை கூடத்தை தனியாருக்கு வழங்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்த விடயத்துடன் துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு தொடர்புள்ளளது என குறித்த தொழிற்சங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மற்றும் இது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தனது கையெழுத்துடன் கூடிய கடிதம் பற்றி தெளிவுப்படுத்தும் போதே சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்று நோய் காரணமாக விமான நிலையம் மூடப்பட்ட காலத்திலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை கூடம் நிறுவப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 13 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam