யாழ்ப்பாணத்தை விட்டு தப்பியோடிய ஆவா குழு
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோண்டாவில் பகுதியில் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த 14 பேர் கொண்ட குழுவின் தாக்குதலில் 7 பேர் காயமடைந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த மோதல் ஆவா குழு அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பலின் செயல் என கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் 7 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் இருவரின் நிலைமை ஆபத்தாக உள்ளதென தகலவ் வெளியாகியுள்ளது.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
