அஸ்ட்ராசென்கா தடுப்பூசி இடைநிறுத்தப்படாது என அறிவிப்பு
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசி இடைநிறுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் சில நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இலங்கையில் இந்த தடுப்பூசி இடைநிறுத்தப்படாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளை இலங்கை பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்ட்ராசென்கா தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மக்கள் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் இலங்கையில் கோவிட் - 19 நோய்த்தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் ரமேஸ் பத்திரண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri