இலங்கையின் பிரச்சினையை தீர்க்க வழி கூறும் அமெரிக்காவின் முக்கியஸ்தர் (Photo)
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 203 இலிருந்து 290 வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு இலங்கை பணச்சபை முறைமையை ஸ்தாபிப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹன்க் மிக மோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளைச் செய்து வருகின்றார்.
அவ்வாறு இட்டிருக்கும் ஒரு பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 26 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை முகம்கொடுத்திருக்கக் கூடிய டொலர் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் அந்த நாட்டிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த நெருக்கடியின் தீவிரத் தன்மையைக் குறைப்பதற்கு இலங்கையில் கடந்த 1884 தொடக்கம் 1950ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த பணச் சப முறைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சிலோன் என்று அறியப்பட்ட காலத்தில் பணச்சபை முறைமை நடைமுறையில் இருந்ததுடன் 1950ஆம் ஆண்டில் அம்முறைமை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Since January 1st 2022, the Sri Lankan rupee has depreciated ~26% against the USD. #SriLanka's severe balance of payments crisis and recent fuel price hikes are sinking LKA. To ease the crisis, LKA needs to install a currency board, like the one it had from 1884 until 1950. pic.twitter.com/rz8fSn0l2J
— Steve Hanke (@steve_hanke) March 24, 2022





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
