இளைஞனை மோதி தள்ளிய அமெரிக்க தூதரக சொகுசு வாகனம் (Photos)
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (28) காலை10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மூன்று சொகுசு வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நகர்ப் பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி பிரதான வீதியிலிருந்து இடது கரைக்கு துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியுள்ளது.
விபத்திற்குள்ளான சொகுசு வாகனத்தில் அமெரிக்க தூதரக முக்கியஸ்தர்கள் பயணம் செய்ததாகத் தெரியவருகிறது.
குறித்த விபத்தில் திவாகர் (வயது -19) கூமாங்குளத்தை சேர்ந்த இளைஞர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
