துறைமுக நகரம் சீன காலணி என கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை! - அரசாங்கம்
துறைமுக நகரம் சின காலணி என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகர் அமைந்துள்ள புதிய நிலப்பரப்பு இந்த நாட்டுக்கு சொந்தமானது என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக நகர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிலப்பரப்பு உள்ளடக்கம் பற்றிய விரபங்கள் மற்றும் அதன் வரைபடம் என்பன பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நகரம் மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்திற்கு சொந்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நகரத்தில் ஏதேனும் நிர்மானப் பணிகள் செய்ய நேரிட்டால் அதற்கு மாகாணசபை உள்ளுராட்சி சபைகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ள நேரிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதனை விரும்ப மாட்டார்கள் எனம் இதன் காரணமாக பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நகரின் மூலம் புதிதாக 83,000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரிற்கு பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் பூரண சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனவும் அதில் தமக்கு 100 வீதம் நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினர் துறைமுக நகர் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
