ரிஷாத்துக்கு எதிராக 'மொட்டு' போர்க்கொடி
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ரிஷாத்துக்கு எதிராக ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ரிஷாத் பதியுதீனை வெளியேற்றுவதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்துவிட்டு, நீதிக்காக குரல் கொடுப்பதே பொருத்தமான செயற்பாடாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri