தண்ணீரூற்று கிழக்கு கிராம சேவகர் அலுவலகத்தின் முன்னுதாரணமற்ற செயற்பாடு
தண்ணீரூற்று கிழக்கு கிராம சேவகர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தின் கீழ் வருகின்றது.
கிராம அலுவலர் அலுவலகம் ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதோடு தண்ணீரூற்று பள்ளிவாசலுக்கு எதிராகவும் இது இருப்பது குறிப்பிடத்தக்கது.
முல்/112 இலக்கமுடைய இந்த கிராம அலுவலர் அலுவலகம் குறித்து அலுவலகத்திற்கு வருகை தருவோர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
கிராமம் ஒன்றிற்கு முன்னோடியாக அந்த கிராமத்தினை முகாமை செய்யும் கிராம அலுவலகமே விளங்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
அலுவலக சூழலின் காட்சித் தோற்றம்
முல்லைத்தீவு - மாங்குளம் (A34) பிரதான வீதியில் இருந்து ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் சிறு வீதியின் வழியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
கிராம சேவகர் அலுவலகம் இவ்வூர் சனசமூக நிலைய கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.இந்த வளாகம் முழுமையாக கிராம சேவகரால் நிர்வகிக்கப்படுவதாகவும் அனைவரோடும் நன்மரியாதையோடு பழகும் இயல்புடையவர் எனவும் அலுவலகத்தின் அயலில் வதியும் மக்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
பொதுப்பட அலுவலகம் இயல்பாக காட்சித் தோற்றமளித்த போதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள் அதிகமிருப்பதனை சுட்டிக்காட்டிய போது அயலவர்கள் அதனை ஆமோதித்தமையையும் சுட்டிக் காட்டல் பொருத்தமானது.
அலுவலகத்தின் வீதியோரம் சீரற்ற தோற்றத்தைக் காட்டுகின்றது. அவ்வாறே அலுவலகத்தின் உள்ளேயும் புற்கள் வளர்ந்து நிறைந்துள்ளன.
ஒருபட சீரான நேர்த்தியான தோற்றத்தை மெல்ல இழந்து போவதனையும் அலுவலகத்தின் முற்றம் என அழைக்கப்படும் நிலம் தூய்மையற்றதாக பற்றையாக தோன்றுவது நல்ல காட்சித் தோற்றமாக அமையாது.அதனை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது தான் மக்கள் வந்து செல்லும் ஒரு அலுவலகத்தின் நல்ல இயல்பாகும் என ஒய்வு பெற்ற கிராம சேவகர் ஒருவர் இது விடயமாக கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டார்.
அலுவலகத்தை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதில் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கிராம சேவகர் ஆகிய இரு தரப்பினரும் கூடிய கவனமெடுத்திருக்க வேண்டும்.
அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களில் ஒருவருக்குக் கூடவா இந்த இடத்தினை சுத்தமாக பேண வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அதனை நினைக்கும் போது மனவருத்தமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
வழங்கப்பட்டும் பொருத்தப்படாத பெயர்ப்பலகை
கிராம சேவகர் அலுவகம் இதுவென குறித்து நிற்கும் பெயர்ப்பலகை பொருத்தப்படவில்லை.இது கிராம சேவகர் அலுவலகத்தை தேடி வருவோருக்கு அயலவர்கள் உதவியை நாட வைக்கின்றது.
இத்தகைய உதவிகள் பல சந்தர்ப்பங்களில் அலைக்கழிச்சலை தந்துவிடும்.பெயர்ப்பலகை பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஊற்றங்கரை மற்றும் தண்ணீரூற்றைச் சேர்ந்த பல கல்வியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பெயர்ப்பலகை அலுவலகத்தின் உரிய இடத்தில் பொருத்தப்படாது கீழே வைக்கப்பட்டுள்ளதனை சுட்டிக் காட்டி வழங்கப்பட்ட பெயர்ப்பலகை உரிய இடத்தில் உரிய முறையில் பொருத்தப்படுவதற்கு எது தடையாக இருந்திருக்கலாம் என கேட்டதற்கு கிராம சேவகரின் பொறுப்பற்ற செயலைத்தவிர வேறொரு காரணம் இருந்திருக்காது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
சனசமூக சேவை நிலையத்தின் கட்டுமான அறிவிப்பை தாங்கிய பெயர்ப்பலகை சிதைந்து செல்வதனையும் அறிவுறுத்தல்களை உற்று நோக்கினால் மட்டுமோ வாசித்துக் கொள்ள முடிகின்றமையும் அவதானிக்கப்படுள்ளது.
பொருத்தமற்ற காட்சித் தோற்றத்திற்குரிய பெயர்ப்பலகைகள் அகற்ப்படுதலே சாலப் மொருத்தமானது.
கிராம சேவகரின் முன்மாதிரியான செயற்பாடுகள் எவை?
கிராமம் ஒன்றை அந்த நாட்டு அரசுடன் இணைந்து பயனிக்கச் செய்யும் ஒரு இணைப்பே கிராமசேவகர் என்ற பதவி நிலை.
பொலிஸ் அதிகாரங்கள் கூட பகுதியளவில் பகிரப்பட்டுள்ளதும் கிராம மக்கள் ஒவ்வொருவரினதும் உணர்வுகளை நாடிபிடித்தறிந்து அதற்கேற்றாற் போல அவர்களை நாட்டின் எதிர்காலத்தைத் தாங்கிச் செல்ல பொருத்தமான முறையில் பயனிக்க தூண்டும் அளப்பெரிய பெரும் பொறுப்பை சுமக்க வேண்டியதும் கூட கிராம சேவகர் என்ற பதவிநிலையே!
கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடுகளும் சுத்தமாக பேணப்படுதலை கிராம சேவகர் அலுவலகத்தை சுத்தமாக பேணலில் இருந்து ஆரம்பிக்கலாம்.
கிராமத்தினை சுத்தமாக்கும் போது வீடுகள் தாமாகவே சுத்தமாகிக் கொள்ளும். அப்படியானால் எப்படி தொற்றுநோய்கள் விரைவாக பரவி சமூகச் சிக்கலை தோற்றுவிக்க முனையும்.
சுத்தம் சுகம் தரும் என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் நமக்கு இந்த தகவல் தயக்கத்தை ஏற்படுத்துவதாக முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கிராம சேவகர் ஒருவரது பணி பற்றிய தன் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
தண்ணீரூற்றின் ஊற்றுள்ள பகுதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கையான தரை மேல் ஊற்றுக்களை கொண்டுள்ள இடங்களில் தண்ணீரூற்றும் ஒன்று.
தணணீரூற்று கிழக்கு மற்றும் நீராவிப்பிட்டி மேற்கு கிராம எல்லைகளில் அதிகமான தரைமேல் நீரூற்றை அவதானிக்கலாம்.
தரைமேல் நீரூற்றினால் ஊறிவரும் நீர் சிறிய ஆறாக பாய்ந்து செல்கின்றது. அந்த ஆற்றின் ஊற்று மையம் இந்த கிராம சேவகர் அலுவலகத்தை அண்மித்திருப்பதால் இந்த இடம் ஈரலிப்புக் கூடிய நிலமாக அமைந்து விடுகின்றது.
மாரிகால மழைப்பொழிவு ஆரம்பித்துள்ள இவ்வேளை இந்தமாதிரியான முன்னுதாரணத்தினால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதோடு டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் சாதகமான வாய்ப்புக்கள் தோன்றிவிடும் என்ற அச்சம் சமூக சேவையாளர்களிடம் இருப்பதனையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும்.
கிராம சேவகர் அலுவலகம் போன்ற பொதுமக்களுக்கு சேவை வழங்கக்கூடிய இடங்களை சுத்தமாக பேணப்படுதலை ஊக்கப்படுத்தல் நன்று.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
